31/3/13

விவாகரத்தை தவிர்ப்பதற்கான ஆலோசனைகள்...



இந்த உலகில் எந்த ஒரு உறவுமே நிலையாக நிலைப்பதில்லை. இதற்கு காரணம் ஒவ்வொருவரின் மனநிலையும் வித்தியாசமானதாக இருப்பது தான். மனிதன் என்றால் வித்தியாசம் இருக்கும் தான். ஆனால் அதே சமயம் புரிந்து கொள்ளுதலும், விட்டுக் கொடுத்து நடப்பதும் நிச்சயம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். அத்தகைய மனநிலை இல்லாவிட்டால், அனைத்து உறவுகளுமே பாதியிலேயே பிரிந்துவிடும். மேலும் இந்த நிலைமை திருமணமானவர்களுக்கு கூட உள்ளது. இதற்கு இருவரிடமும் சரியான புரிதலும், மனப்பக்குவமும் இல்லாததே ஆகும். 

27/3/13

இந்திய கிரிக்கெட் அணி


Anbalagan Veerappan
மிகத் தீவிர கிரிக்கெட் ரசிகராக இருப்பவர்களுக்கும் தெரியாத சேதி ஒன்று இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி என்பது இந்திய அணி கிடையாது.

இந்திய கிரிக்கெட் வாரியம், "எங்களது அணி தனியார் அணி. எங்களுக்கும் இந்திய அரசுக்கும் சம்பந்தமில்லை" என்றது.

அதுவும் சுப்ரீம் கோர்ட்டில்!

ஆகவே, தெளிவாக ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ளுங்கள் கிரிக்கெட் ஆர்வலர்களே...

"இந்தியா மட்டன் ஸ்டால்" , "இந்தியா கவரிங்", "இந்தியா சால்னா கடை" என்பதுபோல இந்திய கிரிக்கெட் வாரியமும் ஒரு தனியார் கடை - அதாவது நிறுவனம்.

இதற்கும் இந்தியாவுக்கும் சம்பந்தமில்லை.

ஆகவே இந்திய அணி தோற்றால் வாடாதீர்! ஜெயித்தால் ஆடாதீர்! {படித்ததில் பிடித்தது}
மிகத் தீவிர கிரிக்கெட் ரசிகராக இருப்பவர்களுக்கும் தெரியாத சேதி ஒன்று இருக்கிறது.

பெற்றோர்கள்


 
வயதான பெற்றோரைப் பராமரிக்க சில எளிய வழிகள்...

அனைவருக்குமே பெற்றோர்கள் கடவுள் போன்றவர்கள். அத்தகைய பெற்றோர் நன்கு இளமையாக இருக்கும் போது, குழந்தைகளை நல்ல நிலைமையில் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கு வயதானால், அவர்களால் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாதவாறு இருப்பார்கள்.

ஈழத்தின் வரலாறு-8

 {Taken from=== facebook.com  திருக்குறள் / Thirukura}

 
பண்டாரநாயகா இறந்து விட்டார்...அவருடன் இட்டுக் கொண்ட ஒப்பந்தமும் செயல்படுத்தப்படவில்லை... இந்நிலையில் தமிழர்களின் உரிமைகள் என்னவாகும் என்று தமிழர்கள் சிந்தித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் அடுத்த தேர்தலில் வென்று இலங்கையின் முதல் பெண் பிரதம மந்திரி ஆகின்றார் பண்டாரநாயகாவின் மனைவியார் திருமதி. சீறிமாவோ பண்டாரநாயகா.

ஈழத்தின் வரலாறு-7


                      {Taken from=== facebook.com  திருக்குறள் / Thirukura}
அடிமையாய் இருக்கும் ஒருவனுக்கு சுதந்திரத்தினைப் போல் கனவுகளைத் தரக் கூடிய விடயங்கள் வேறெதுவும் கிடையாது. சுதந்திரம் என்றச் சொல் அவனுள் நம்பிக்கையினை விதைக்கின்றது...அந்த நம்பிக்கையினைக் கொண்டே அவனும் ஆவலாய் சுதந்திரத்தினை எதிர்பார்த்துக் கொண்டு நிற்க ஆரம்பிக்கின்றான்.

ஈழத்தின் வரலாறு-6

  {Taken from=== facebook.com  திருக்குறள் / Thirukura}

வேண்டும் சுதந்திரம்...!!!

20 ஆம் நூற்றாண்டில் அதிகமாக கேட்கப்பட்ட ஒரு முழக்கம் இதுவாகத்தான் இருந்து இருக்கக் கூடும். காரணம் எளிது தான்... அன்றைய காலக்கட்டத்தில் சுதந்திரமாக இருந்த தேசங்களை விட அடிமையாக இருந்த தேசங்களின் எண்ணிக்கையே அதிகம்

ஈழத்தின் வரலாறு-5

 {Taken from=== facebook.com  திருக்குறள் / Thirukura}
தேயிலைத் தோட்டங்கள்...!!!

இலங்கையின் வரலாறையும் அதில் தமிழர்களின் வரலாற்றினையும் நாம் காண வேண்டும் என்றால் நிச்சயமாய் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களினைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ளத் தான் வேண்டும். காண்போம்...!!!

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முழு இலங்கையையுமே தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டிருந்த ஆங்கிலேயர்கள் சற்று நிதானமாக அவர்கள் பிடித்த தீவினைக் காணுகின்றனர்.

26/3/13

ஈழத்தின் வரலாறு-4

  {Taken from=== facebook.com  திருக்குறள் / Thirukura}

           கி.பி 19 ஆம் நூற்றாண்டு...!!!

ஆங்கிலேயர்கள் இலங்கையினுள் நுழைகின்றார்கள். அவர்களின் குறிக்கோள் ஒன்று தான். 'இலங்கை...அழகான சிறியதொருத் தீவு...அப்படிப்பட்ட தீவினில் பலரின் ஆட்சி இருப்பது சரியல்ல...போர்கள், பிரச்சனைகள் என்று எப்பொழுது வேண்டும் என்றாலும் அமைதி கெடும் சூழல் உருவாகலாம்...அமைதியினைக் கெடுக்க நாம் அனுமதிக்கலாமா...கூடாது தானே...ஏன் வம்பு...அமைதியினை நிலைநாட்ட நாமே இந்தத் தீவினை ஆண்டு விடலாமே...என்ன கெட்டு விடும்'.

ஈழத்தின் வரலாறு-3

  {Taken from=== facebook.com  திருக்குறள் / Thirukura}

ஒரு கேள்வி...!!!

ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர் இங்கே இந்தியா என்று ஒரே ஒரு தேசம் இருந்ததா அல்லது பல்வேறு தேசங்கள் இன்று இந்தியா என்றிருக்கும் நிலப்பரப்பில் இருந்துக் கொண்டு வந்தனவா?

வடக்கே சிலரின் ஆட்சி...தெற்கே வேறு சிலரின் ஆட்சி...கிழக்கிலும் சரி மேற்கிலும் சரி பல்வேறு மன்னர்கள்/இனங்களின் ஆட்சி என்று தானே இருந்தது. அவை அனைத்தையும் வென்ற பின்னர், அத்தேசங்கள் அனைத்தையும் இணைத்து ஐரோப்பியர்கள் உருவாக்கியது தானே இன்றிருக்கும் ஒன்றிணைந்த இந்தியா.

ஈழத்தின் வரலாறு-2

                  {Taken from=== facebook.com  திருக்குறள் / Thirukura}
"அவங்களோட நாட்டுக்கு வேல செய்றதுக்கு போயிட்டு எங்களுக்குன்னு தனி நாடு கொடு அப்படின்னு கேட்டா அவன் தந்துருவானோ...இல்ல அப்படி கேக்குறதும் சரியான ஒண்ணா...போனோமா வேலயப் பார்த்தோமா...வந்தோமான்னு இல்லாம தனி நாடு கேட்டா அவன் அடிக்கத் தான் செய்வான்"


இன்றைக்கு ஈழத்தினைக் குறித்து நாம் எந்த ஒரு விவாதத்தில் பங்கெடுத்துக் கொண்டாலும் நாம் நிச்சயமாய் இந்தக் கூற்றினை எதிர்பார்க்கலாம்.

ஈழத்தின் வரலாறு-1

'நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்.'

{Taken from=== facebook.com  திருக்குறள் / Thirukura}


  வள்ளுவனின் அருமையானதொருக் கூற்று. ஒரு பிரச்சனையின் தோற்றத்தை முழுமையாக ஆராய்ந்துப் பார்த்தப் பின்னரே அப்பிரச்சனைக்குரிய தீர்வினை நாம் செயல்படுத்த வேண்டும். பிரச்சனையின் உண்மையான காரணத்தினை அறியாது நாம் மேற்கொள்ளும் யாதொரு செயலும் தக்க தீர்வாக அமையாது.

" ஐ லவ் யூ அப்பா".

              {படித்ததில்பிடித்தது}F.Book]


ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது.

உயிரில்லா அம்மா, பாலில்லா பிள்ளை




பசி பசி
எனக்கு வயிற்றுப்பசி,
சிங்களனுக்கோ!?? ரத்தப்பசி...

ஏர்டெல்


 

ஈழ போராட்டத்தை அழித்ததின் பின்னணியில் ..ஏர்டெல் .. தயவு கூர்ந்து நேரம் ஒதுக்கி முழுமையாக படியுங்கள் .......

****************************

பொருளாதார புறக்கணிப்பு :: ஏர்டெல் சேவையை ஏன் புறக்கணிக்க வேண்டும்?

இலங்கை மேலும் சில..பதிவுகள் -1


{taken from}-   திருக்குறள் / Thirukural

1) சிங்களவர்கள் இலங்கையின் பூர்வீகக் குடியினரா?

இல்லை. சிங்களவர்கள் என்பவர்கள் கி.மு நான்காம் நூற்றாண்டு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்த கலிங்கத்துப் பகுதியில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டு இலங்கைக்கு பிழைத்துப் போன இளவரசன் விஜய சிங்கனின் வம்சாவழியினரே ஆவர்.

25/3/13

ஒற்றைப்பார்வை

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுக்க பரவியிருக்கும் மாணவ எழுச்சியைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பாலசந்திரனின் ஒற்றைப்பார்வை உண்டு பண்ணிய அதிர்வே இந்த மாணவர்களின் எழுச்சி.

24/3/13

மாத்தி யோசி



கண் தெரியாத சிறுவன் ஒருவன் ஒரு கோவில் அருகில் பிச்சை எடுத்து கொண்டிருந்தான்.அவன் எதிரில்’”எனக்கு இரண்டு கண்களும் தெரியாது,தயவு செய்து தருமம் பண்ணுங்கள்” என்று எழுதி இருந்தது.

அந்த வழியில் போவோர் வருவோர் எல்லாம் அதை பார்த்து
கொண்டே சென்றார்கள், யாரும் தருமம் பண்ணுவது மாதிரி தெரியவில்லை.

ஒரு நபர் தன்னுடைய பர்சில் இருந்து பணத்தை எடுத்து அவன் தட்டில் போட்டார்.பிறகு அங்கு வைத்து இருந்த போர்டின் பின் பகுதியில் ஒரு வாசகத்தை எழுதி எல்லாரும் பார்க்கும்படி வைத்து விட்டு சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் அதை படிக்கும் அனைவரும் அவன் தட்டில் சில்லரையை போட ஆரம்பித்தனர்.மாலை ஆனதும்

புத்திசாலித்தனம்.

                                                {படித்ததில் பிடித்தது }


ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார்.அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது.ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார் ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு வயதான மெக்கானிக் தான் அதை பழுது பார்த்து தருவதாக சொன்னார்.சரி என்று அவரும் ஒப்புக் கொண்டார்.மெக்கானிக் பெரிய பையில்

20/3/13

பள்ளித்தளம்

(சிறு கதை)
--------------------
அந்தியூரிலிருந்து காலை ஆறு மணிக்கு புறப்படும் பேருந்து பர்கூர் வந்து மணியாச்சி பள்ளத்தை அடையும்போது எட்டரை மணி ஆகிவிட்டது. மணியாச்சி பள்ளத்திற்கு மேல் தம்புரெட்டி, ஒன்னகரை, கொங்காடை போன்ற மலை கிராமங்களுக்கு கால் தடத்தில்தான் நடந்துபோக வேண்டும். மணியாச்சி பள்ளத்தில் எல்லாக் காலங்களிலும் தண்ணீர் சலசலத்து ஓடும். காலை ஒன்பதரை மணிக்கு ஒன்னகரை பள்ளியின் காலை வழிபாட்டு சப்தம் மணியாச்சி பள்ளத்தில் உள்ளவர்களுக்கு லேசாகக் கேட்கும்.

18/3/13

குள்ள நரியும் சின்ன முயலும்!

குள்ள நரியும் சின்ன முயலும்!

Mar. 18 2013

         குள்ள நரியும் சின்ன முயலும்.

முன்னொரு காலத்தில் சாம்பல் நிற முயலும்,​​ தந்திரமான குள்ள நரியும் இருந்தன. பருவநிலை மாறியது.​ விரைவிலேயே வந்துவிட்டது குளிர் காலம்.​ பனிப்புயல் வீசியது.​ வானத்திலிருந்து சிறுசிறு பனித்துகள்கள் மழைபோல் கொட்டத்தொடங்கின.​ குளிரின் கடுமையால் முயலின் சாம்பல் நிறம் முற்றிலும் வெளுத்து,​​ பனி வெண்மையானது. 'இந்தக் குளிரைத் தாங்க முடியவில்லை.​

14/3/13

உதவிக்கு போன ஆசிரியை





====================

ஆரம்ப வகுப்பு சிறுவன் ஒருவன் விளையாடிய பின்னர் தனது சப்பாத்துக்களை அணிய முயற்சித்துக் கொண்டிருந்தான். ஒரு காலில் சப்பாத்தை அணிந்த பின்னர் மற்றதை அணிய முடியாமல் சிரமப்பட்ட அவன் தனது ஆசிரியையை உதவிக்கு அழைத்தான். தான் உண்டுகொண்டிருந்த சிற்றுண்டியை தள்ளிவைத்துவிட்டு அவனுக்கு உதவச் சென்ற ஆசிரியை மிகவும் சிரமப்பட்டு அடுத்த சப்பாத்தை அணிவித்தாள். அதற்குள் அவளத உடலெங்கும் வியர்வை வழியத் தொடங்கியது.

எழுந்து நின்று தனது கால்களை அவதானித்த சிறுவன், "டீச்சர் சப்பாத்து ரெண்டும் கால்மாறிப் போட்டிருக்கு" என்றான்.

8/3/13

இனக்கொலை


தி.மு.க.வின் டெசோ நடத்தும் பொது வேலை நிறுத்தம்:
சிங்கள- இந்திய அரசுகளின் இனக்கொலைப் போரை
மறைக்கும் மூடுதிரையா?

===============================================
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கேள்வி

அப்பா ஒரு நிமிடம்

            =================================
மகன் :    "அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?"
தந்தை : "கண்டிப்பா.. என்ன கேளு..?"
மகன் : "ஒரு மணி நேரத்திற்கு எவளோ சம்பாரிப்பிங்க ?"
தந்தை : "அது உனக்கு தேவை இல்லாதே விஷயம் ..
             நீ....
            எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?"
மகன் : "சும்மா தெரிஞ்சிக்கத்தான்... சொல்லுப்பா ."
தந்தை : "உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன்  .
சராசரியா..மணிக்கு100 ரூபாய் சம்பாரிப்பேன்  ..."
மகன் : "ஓ !!! (தலைகுனிந்தவாறே) .. அப்பா நா அதுல 50   ருபாய் எடுத்துக்கவா?"

                   தந்தைக்கு கோபம் வந்தது ...

3/3/13

இலங்கையில் சீனா

    சென்னை: இலங்கையில் சீனா கால்பதித்துவிட்டது என்று சொல்லிக் கொண்டு சிங்கள அரசுக்கு ஆதரவாக மத்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியவாதிகளும் பேசி வருகின்றனர். உண்மையில் இலங்கை வழியே சீனாவால் இந்தியாவுக்கு பேராபத்து காத்திருக்கிறதா? நிச்சயமாக ஒருபோதும் ஆபத்து வரவே வராது என்பதை உறுதியாகச் சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்...