30/6/13

ஈரோடு, சாக்கடையாக மாறும் காலிங்கராயன் வாய்க்கால்.



ஈரோடு,

காலிங்கராயன் வாய்க்காலில் பாய்ந்து வரும் சாயக்கழிவை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சாக்கடையாக மாறும் வாய்க்கால்


ஈரோடு முதல் கொடுமுடி வரை பல ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு பாசனம் அளித்து வரும் பழமையான காலிங்கராயன் வாய்க்கால் சுமார் 750 ஆண்டுகளாக இந்த பகுதி விவசாயிகளின் ஒரே ஜீவாதாரமாக உள்ளது. ஆனால் ஈரோட்டில் இயங்கி வரும் பல சாயப்பட்டறை மற்றும் தோல்

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்: ஒரு ஆய்வு முயற்சி 12- இறுதிப் பகுதி



தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்: ஒரு ஆய்வு முயற்சி 12- இறுதிப் பகுதி




 இன்றைக்கு தமிழகம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றது. தமிழ் நாட்டின் வளங்களும் வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ் மொழியோ புறக்கணிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அதன் செல்வங்கள் மறைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும்

24/6/13

தமிழர்கள் ஆண்ட பரம்பரையா ?- தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்: ஒரு ஆய்வு முயற்சி 11



தமிழர்கள் ஆண்ட பரம்பரையா ?- தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்: ஒரு ஆய்வு முயற்சி 11  
 சென்றப் பதிவில் எவ்வாறு தமிழர்கள் அவர்களைத் தவறாக சத்திரியர்கள் என்றுக் கருதிக் கொண்டு இருக்கலாம் என்று கண்டோம். இப்பொழுது நாம் இங்கே மற்றுமொரு விடயத்தினையும் காண வேண்டி இருக்கின்றது. ஒரு நாடார் இனப் பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது கிட்டிய விடயம் தான் அது.

இன்று நாடார்களும் தாங்கள் ஆண்ட பரம்பரை என்றும் தாங்கள் சத்திரிய வம்சத்தினைச் சார்ந்தவர்கள் என்றும் கருத்தினைக் கொண்டு இருக்கின்றனர்.

23/6/13

தமிழர்கள் சத்திரியர்களா? - தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 10



தமிழர்கள் சத்திரியர்களா? - தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 10 



சென்ற பதிவில் தமிழர்கள் அனைவரும் சூத்திரர்கள் அல்லது பஞ்சமர்கள் தாம் என்றே கண்டு இருந்தோம். இங்கே தான் சில நண்பர்கள் சில கேள்வியினை எழுப்புகின்றனர். "அதெப்படி தமிழர்கள் அனைவரையும் சூத்திரன் அல்லது பஞ்சமன் என்றுக் கூறுகின்றீர்?...நாங்கள் ஆண்ட இனம்...அப்படி என்றால்

7/6/13

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்- ஒருஆய்வுமுயற்சி-9.




தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்- ஒருஆய்வுமுயற்சி-9.


இரு நாடுகள் இருக்கின்றன. இரண்டிலும் நூறு மக்கள் இருக்கின்றனர் என்றே வைத்துக் கொள்வோம். இப்பொழுது ஒரு நாட்டினில் திறமையின் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்கின்றனர். அதாவது நூறு பேரில் சண்டை இடும் திறமையும் வலிமையையும் ஒரு நாற்பது பேரிடம் இருக்கின்றது என்றே வைத்துக் கொள்வோம். அந்த நாற்பது பேரினை வைத்துக் கொண்டு ஒரு படையினை ஒரு நாடு உருவாக்குகின்றது.

4/6/13

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்- ஒருஆய்வுமுயற்சி-8...



தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்- ஒருஆய்வுமுயற்சி-8...
இராச இராச சோழன்!!!

என்ன தான் சொல்லுங்க... இந்தப் பெயரைக் கேட்ட உடன் ஒரு பெருமித உணர்ச்சி தமிழர்களுக்குள் வருவதனைத் தடுக்க முடியாது தான். காரணம் அவன் செய்த செயல்கள் அத்தகையவை. தமிழர்களின் புகழை மீண்டும் உலகறியச் செய்தவன் அவன்....செந்தமிழை வளர்த்தவன் அவன்...தமிழரின் பெருமையை நிலை நாட்டியவன் அவன்... என்று இராச இராச சோழனை கொண்டாடுவதற்கு இங்கே ஆயிரம் காரணங்களைக் கூறுவதற்கு ஆட்கள் இருக்கின்றனர்.

3/6/13

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்- ஒருஆய்வுமுயற்சி-7...



தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்- ஒருஆய்வுமுயற்சி-7...
 வட இந்தியாவினில் இருந்த இந்திய அரசனை சூழ்ச்சியால் வீழ்த்தி அங்கு ஆரிய வர்த்தம் என்று தங்களின் அரசினை அமைத்த ஆரியர்கள் முழு இந்தியாவினையும் கைப்பற்றிக் கொள்ள உதவும் வண்ணம் அன்று இந்தியாவினில் எழுந்திருந்த பக்தி இயக்கத்தினை பயன் படுத்திக் கொள்ள முயன்றனர் என்று நாம் கண்டு வருகின்றோம். இப்பொழுது இதனைத் தொடர்ந்து நாம் காண்பதற்கு முன்னர் வேறு சில முக்கியமான விடயங்களைக் கண்டு விடுவது நன்றாக இருக்கும்.

2/6/13

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்- ஒருஆய்வுமுயற்சி-6


 கி.பி ஏழாம் நூற்றாண்டு இந்தியாவின் ஒரு பகுதியை ஆரியர்கள் கைப்பற்றி விட்டனர் என்றும் அப்படிக் கைப்பற்றப்பட்ட பகுதியினைத் தான் ஆரியவர்த்தம் என்றும் அவர்கள் பெயரிட்டு அழைத்தனர் என்றும் நாம் சென்றப் பதிவில் கண்டோம். மேலும் அவ்வாறு கைப்பற்றப் பட்ட இடத்தில் இருந்த மக்களுக்கு இயற்றப்பட்ட சட்ட நூல் தான் மனு தர்மம் என்பதனையும் நாம் கண்டோம்.

இப்பொழுது நாம் இங்கே காண வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால் எண்ணிக்கை...மக்கள் தொகை எண்ணிக்கை!!! என்ன தான்